தமிழ் பாலாறு

"தமிழ் செம்மல்" என்று தமிழக அரசு பட்டம் அளித்து கௌரவித்து பெருமை பெற்ற - வாரியார் தாசன், கவிஞர் ச.இலக்குமிபதி, வேலூர்:

கவிஞர் .ச.இலக்குமிபதி வாரியார் சுவாமிகளுக்கு தாசன் என்பதால் வாரியார் தாசன் என்கிற புனைப் பெயர்.

25 நூல்களின் எழுத்தாளர்! பலநூறு கவியரங்குகளில் பங்கு பெற்ற கவிஞர்! நாடறிந்த நாவலர்களின் தலைமையில் பங்கேற்ற பட்டிமன்ற பேச்சாளர்!

வேலூர் கம்பன் கழக செயலாளர்!
தமிழக எழுத்தாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர்!
வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தின் ஆஸ்தான கவிஞர்!
எட்டயபுரத்தில் பாரதி பணி செல்வர் விருது பெற்ற வர்!
மூத்த தமிழறிஞர் ஞானசம்பந்தம் அவர்களால் கவிதை முரசு என்கிற விருது வழங்கப்பட்ட வர்!
ஸ்ரீ ஓங்காரநந்தா சுவாமிகளால் ஞான குரலோன் என்கிற விருது வழங்கப்பட்டவர்!
விரைவில் தமிழில் முனைவர் பட்டம் பெற இருக்கிறவர்!
மலேசியா வரை சென்று ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் பற்றிய சொற்பொழிவு அளித்திருக்கிறார்!