"பக்தி" என்னும் திருநாமத்தோடு தொடங்கப்பெற்றுள்ள "BAKTHI TV" என்னும் இந்த சேனலில் தெய்வங்களின் பெருமையும் வரலாறும் தொகுத்து தரப்பட்டுள்ளது. மேலும் பக்தி பாடல்கள், பக்தி சொற்பொழிவுகள், திருக்கோவில்களின் வரலாறு, திருவாசக முற்றோதல் போன்றவை இடம் பெற்றுள்ளன.
திருவாசகசித்தர்.திருக்கழுக்குன்றம்.சிவ.திரு.தாமோதரன் ஐயா, திருவாசகப்பித்தர் சிவ.திரு.வாதவூரடிகள், தில்லை திருக்கயிலாயபரம்பரை மௌனத்திருமடம் ஸ்ரீலஸ்ரீ.சுந்தரமூர்த்தி சுவாமிகள், சேக்கிழார் சீர் பரவுவார் பவானி தியாகராசன் ஐயா, தவத்திரு.குமாரசாமி தம்பிரான் சுவாமிகள், வாரியார் முரசு சிவ.திரு.சக்தி சந்திரசேகரன் ஐயா , உ.வே.எம்.ஏ வேங்கடகிருஷ்ணன், சிவ.திரு.சோலார் சாய் ஐயா,இரா.இரமேஷ்குமார் ஐயா போன்றோர் பக்தி பாடல்களின் மூலமாகவும் பக்தி சொற்பொழிவுகள் மூலமாகவும் இறைவனை பற்றியும் இறை அடியார்களின் பெருமை பற்றியும் எடுத்துரைக்கின்றனர்.

பக்தி டிவி 2015ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் தனது முதல் ஒளிபரப்பை தொடங்கியது.பின்னர் 2016ம் ஆண்டு முதல் youtube சேனல் வழியாக தனது பணியை செய்துவருகிறது.