Chinfo Tamil Channel

சின்ஃபோ தமிழ் சேனல், சின்மயா சர்வதேச அறக்கட்டளையின் (CIF) தமிழ் மொழி YouTube சேனலாகும். உலகெங்கிலும் உள்ள ஆழ்ந்த இந்திய கலாச்சார அறிவைப் பரப்புவதற்கு சேனல் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

CIF,1989 இல் சேவை நோக்கத்துடன் சுவாமி சின்மயானந்தரால் நிறுவப்பட்டது, இது உலகளாவிய சின்மயா மிஷனின் ஒரு முக்கிய பகுதியாக, இது தத்துவம், சமஸ்கிருதம், வேதாந்தம், வேத கணிதம் மற்றும் இந்திய மேலாண்மைக் கோட்பாடுகள் போன்ற இந்திய அறிவு மரபுகளைப் பாதுகாத்தல் மற்றும் பரப்புதல் செய்வதில் கவனம் செலுத்துகிறது.

சின்ஃபோ தமிழ் சேனல் மூலம் நமது உயர்ந்த சான்றோர்களின் பல்வேறு விரிவுரைகள், சொற்பொழிவுகள் மற்றும் சத்சங்கங்களை ஆன்மீக ஞானத்தை விரும்புவோர் மற்றும் ஆர்வலர்கள் மற்றும் இந்திய தத்துவத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் தமிழ் மொழியில் கேட்டு - கற்று - சிந்தித்து - தெளிய CIF ஒரு அரிய வாய்ப்பை நமக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.